R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
டிக்கோயா- வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தையை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (7) காலையிலேயே,சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.
ஆறு அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.
இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
அத்துடன், பொறியில் அமைக்கபட்டிருந்த கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், இது தொடர்பில் ஹட்டன் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026