Janu / 2023 ஜூன் 13 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் மத்திய பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (13) காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வீதிக்கு இறங்கி ஒரு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
டெல்மார் மத்திய பிரிவு தோட்டத்தில் 11 வயது பாடசாலை சிறுமி ஒருவர் கடந்த (10) ஆம் திகதி காலை பிரத்தியேக வகுப்புக்கு செல்ல பஸ்ஸூக்கு காத்திருந்த போது டெல்மார் தோட்டத்தை சேர்ந்த (62) வயது நபர் இச் சிறுமியை அங்கசேஷ்டை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் டெல்மார் தோட்டத்தை சல்லடையிட்டு தேடிய போது சந்தேக நபர் ஆட்டுப்பட்டி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நபரை விசாரணையின் பின் ஞாயிற்றுக்கிழமை (11) வலப்பனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி மீதான இந்த நடவடிக்கையை கண்டித்தும்,சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் டெல்மார் மத்திய பிரிவு தோட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



24 minute ago
28 minute ago
41 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
41 minute ago
10 Nov 2025