R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
இந்த மாதம் 11ஆம் திகதி லுணுகலை -உடகிருவ காட்டுப்பகுதியில் 14 வயதுடைய சிறுமியுடன் மறைந்திருந்த 18 வயதுடைய இளைஞர் மற்றும் 53 வயதுடைய நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லுணுகலை 27ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமியொருவர் இந்த மாதம் 3ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தால்.
இந்த சிறுமியை கண்டு பிடிப்பதற்காக விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரினால் தேடுதல் மேற்கொண்ட போது, சிறுமியுடன் சந்தேகநபர்கள் இருவர், காட்டுக்குள் குகையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையிலும் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பதுளை- நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், இருவரையும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026