R.Maheshwary / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்தரத்ன
மாத்தளை- தம்புளை வெவல பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு 16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருமணமான 74 வயதுடைய நபர் ஒருவருக்கே மாத்தளை மேல்நீதிமன்ற நீதிபதி ரொஹான் ஜயவர்தனவால், நேற்று (5) இவ்வாறு சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5,000 ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,50,000 ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளி சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து, கத்தியைக் காட்டி அச்சுறுத்தி துஷ்பிரயோகம்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .