Freelancer / 2024 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா கெளசல்யா
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் ஒருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் அடிக்கப்பட்டு கடிக்கப்பட்டு பல வகையான சித்திரவதைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளார்.
அதே சமயம் நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிய தாயார் பொலிஸாரினால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தினர். விசாரணைகளை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவால் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயார் ஒரு குழந்தையின் தாய் மாத்திரமல்லாது தற்போது கர்ப்பிணி தாயாரும் கூட. கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதோடு சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. R
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago