Janu / 2026 மே 13 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சமாதி’ சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் கடந்த திங்கட்கிழமை (11) இரவு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுருகெட்டிய பகுதியில் இயங்கும் இந்த இல்லத்தில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுமிகள் தங்கியுள்ளனர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு அழைத்து வரப்பட்ட கதிர்காமத்தை சேர்ந்த இரு சிறுமிகளும், வெல்லவாயபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுமே இவ்வாறு இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இது குறித்து இல்லத்தின் பெண் காப்பாளர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு காணாமல் போனவர்கள் கதிர்காமத்தைச் சேர்ந்த பி.பி. சுபோதாயி காசிம் (12), பி.பி. ஷரீனா காசிம் (13) மற்றும் வெல்லவாயவைச் சேர்ந்த எஸ்.எம். நெத்மினி நெத்சரா (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொனராகலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் சமிந்த சில்வா தலைமையிலான குழுவினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க
5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago