Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சிறுவர் தினத்தன்று (புதன்கிழமை 01) மொனராகலையில் உள்ள பாடசாலையொன்றின் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனின் தாக்குதலுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் தினத்தையொட்டி, பாடசாலையில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் பங்கேற்பதற்காக மாணவர்களைப் பிரதான மண்டபத்திற்கு அனுப்பத் தயாராகும்போது, குறித்த மாணவன் தனது பாக்கெட்டில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் பவர் பேங்கை எடுத்துச் செல்வதை அவதானித்த ஆசிரியர் அதை எடுத்து மொபைல்போன் எங்கே என்று விசாரித்துள்ளார்.
இதன்போது, மாணவன் ஆசிரியரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், குறித்த மாணவன் கல்வி கற்கும் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்றபோது, மாணவன் ஆசிரியரின் கன்னத்தில் அறைந்து, பாடசாலையை விட்டுத் தப்பியோடியுள்ளார்.
பின்னர் ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து அதிபருக்குத் தகவல் அளித்த பின்னர், சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமனசிறி குணதிலக
24 minute ago
45 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
53 minute ago
54 minute ago