Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியாவிலிருந்து பதுளை சிறைச்சாலை நோக்கி பயணித்த சிறைச்சாலை பஸ்ஸொன்று, நுவரெலியா-பதுளை பிரதான வீதி, ஹக்கல பிரதேசத்தில், பிரதான வீதியைவிட்டு விலகிச் சென்று, வீடொன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அறுவர் காயமடைந்துள்ளனர் என்று, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, இன்று (31) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் மூவரும் ஆண் அதிகாரிகள் மூவருமே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் கைதிகள் எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளது என்றும் விபத்து இடம்பெறும்போது, வீட்டிலிருந்தவர்கள் அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதால், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸ்hர் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
54 minute ago