R.Maheshwary / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜத்லால் சாந்த உதய
அண்மையில் இரத்தினபுரி- மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி மேலதிக நீதவான் துலான் விஜேவர்தன உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் முடி திருத்துனராக தொழில் செய்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கொரோனா தொற்றால் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும், இதனால் வறுமை காரணமாக 7க்கும் அதிகமான கோவில் சிலைகளிலிருந்து நகைகளை திருடியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .