செ.தி.பெருமாள் / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடம் டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகவுள்ள 2019/2020ஆம் ஆண்டுக்கான சிவனடிபாதமலை பருவ காலத்தைமுன்னிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
யாத்திரிகர்களின் நலன் பேணுவதற்காக நடத்தப்படவுள்ள இக்கூட்டம், நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டப கேட்போர் கூடத்தில், கல்பொத்தாவல ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி பெங்கமுவ தம்மதின்ன தேரர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின்போது, யாத்திரிகர்கள் நலன் பேணும் திட்டம், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால், யாத்திரிகர்களின் பாதுகாப்பு பலப்படுத்தல், போதைப்பொருள் முற்றாக ஒழிப்பு, பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்தல், விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், நல்லதண்ணி பொலிஸ் நிலையத்துக்கு 1990 இலக்க அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரண்டும் பெற்றுக்கொடுக்கப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago