செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 18 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலைக்கு, குடும்பத்தாருடன் யாத்திரைக்கு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர், மாரடைப்பு காரணமாக, நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய இவருக்கு, சிவனொளிபாதலையின் ஊசிமலை எனும் இடத்தில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர், நல்லதண்ணி பொலிஸாரால் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் இடம்பெற்றுவரும் சிவனொளிபாதமலை யாத்திரையில், இம்முறை அதிகளவிலான யாத்திரிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
குளிர் அதிகமாக உள்ள நேரங்களில், பல மணித்தியாலங்கள் சென்றாலும், ஓய்வெடுத்துவிட்டே மலையேறுமாறும் முக்கியமாக, மாரடைப்பு, ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள், மலையேறுதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை அதிகாரி லியத்தபிட்டிய கேட்டுக்கொண்டுள்ளார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago