2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சிவனொளிபாத மலையின் பருவகாலம் நிறைவு

Editorial   / 2020 மே 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

சிவனொளிபாத மலையின் 2019ஃ2020 ஆம் ஆண்டுக்கான பருவகாலம், சனிக்கிழமையுடன் (8) நிறைவுக்கு வருகிறது.

2019 டிசெம்பர் மாதம் பௌர்ணமி தினத்துடன்,  இவ்வாண்டுக்கான பருவாகலம் ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக, மார்ச் மாதத்தின் இறுதியில், சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

எனினும் வழமைபோன்றே, பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சனிக்கிழமை (8) பொளர்ணமி தினத்துடன், இவ்வருடத்துக்கான பருவாகலம் நிறைவடையவுள்ளது.

அன்றைய தினம் விசேட பூஜைகள் இடம்பெற்று, சமன் தெய்வத்தின் உருவச்சிலை உள்ளிட்ட ஏனைய புனிதச் சின்னங்கள்,  இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்தாவ ரஜமஹா விகாரைக்குக் கொண்டுச் செல்லப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .