2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சிவனொளிபாதமலைக்குச் சென்ற தவிசாளர் உட்பட ஐவர் கைது

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.கிருஸ்ணா

 

ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது, ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்குச் சென்ற ஹக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் முனிதாச கமகே உள்ளிட்ட ஐந்து பேர், நல்லதண்ணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹக்குரஸ்ஸ பிரதேச சபைக்குச் சொந்தமான லொறியொன்றில் செல்லும் போதே, இன்று (03) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை – அக்குரணை பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டி, அனுமதி பத்திரமின்றி பயணித்த மேற்படி ஐவர் பயணித்த லொறியை,  நல்லத்தண்ணி  பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .