செ.தி.பெருமாள் / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை பகுதியை, புனித பூமியாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பிளாஸ்டின், பொலித்தீன், போதைப்பொருள் பாவனைகளைத் தடை செய்துள்ள நிலையில், அந்தத் தடையை பலர் மீறுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், நல்லதண்ணி நகர், மலை பகுதியில், வெற்றிலை, சிகரெட் ஆகியவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சிலர் சூட்சுமமான முறையில் இந்த விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விற்பனை செய்பவர்களால், மலை உச்சியில் 100 ரூபாய்க்கு சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகின்றத.
எனவே, ஜனவரி மாதத்தில், அதிகளவு உள்ளூர், வெளியூர் யாத்திரிகர்கள் வருவதற்கு முன்னர், இந்த விற்பனையை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago