Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 06 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
மாசிகமாக இன்று (06) மெதின் போயா தினமாகும் இந்த போயா தினத்துடன், கடந்த இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால், சிவனொளிபாதமலைக்கு வருகைதந்த யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
மஸ்கெலியா- நல்லத்தண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஏறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை ஏற்றிவந்த வாகனங்கள், மஸ்கெலியா-நல்லத்தண்ணி வீதியில் நீண்ட வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்றவகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன எனத் தெரிவித்த நல்லத்தண்ணி போக்குவரத்து பொலிஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்றனர்.
இதேவேளை, போதைப்பொருள்களுடன் வருவோரை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சனிக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் வந்த இளைஞர்கள் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அறுவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago