Editorial / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
மஸ்கெலியா – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில், ஹப்புகஸ்தென்ன பகுதியில், இன்று (19) அதிகாலை, பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், அவ்வீதியினூடான போக்குவரத்து, சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் மரத்தை வெட்டி அகற்றி பிரதான வீதியினூடான போக்குவரத்தை சீர் செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் மற்றும் லக்ஷபான, ஒஸ்போன் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்கள் பல, சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் மேல் கொத்மலை, கெனியன், மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்ந்துள்ளது.
இதனால் நீர்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் பிரதேச மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago