2026 மே 09, சனிக்கிழமை

சீரற்ற வானி​லையால் யானைகள் கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

தற்போது நாடளாவிய ரீதியில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 2019ஆம் ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்புச் செயற்பாடு, காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என, வன பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜி. சி சூரிய பண்டார அறிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தின் பின்னவல யானைகள் சரணாலயம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து வனப்பகுதிகளில் உள்ள யானைகள், மனிதர்களால் வளர்க்கப்படும் யானைகள் உள்ளிட்ட அனைத்து யானைகளும், இம்மாதம் 13, 14ஆம் திகதிகளில் கணக்கெடுக்கப்படவிருந்தது. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக, அந்தக் கணக்கெடுப்புச் செயற்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2,556 நிலையங்களில், மேற்படி கணக்கெடுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .