Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக, வவுச்சர் வழங்குவதற்கு கல்வியமைச்சு எடுத்த தீர்மானத்தினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என, அரச நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல், மோசடிகள் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர். கலாநிதி விஜதாஸ ராஜபக்ஷவே, கல்வியமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார் என, அந்த ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கல்வியமைச்சின் மேற்படி தீர்மானத்தின் ஊடாக, 538 மில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதென, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பிலான, வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக, விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி, ஆணைக்குழுவுக்கு இவ்வாரத்துக்குள் அழைக்கப்படுவார் என்றும் அறியமுடிகின்றது.
14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago