Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது முதல் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவர்கள் சுயநலமாக செயற்பட்டதன் விளைவே இன்றைய மலையகத்தின் நிலைக்கு காரணமென, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பூனாகலை- அம்பிட்டிகந்த தோட்டத்தில், நேற்று மாலை (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், மலையகத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நிதி பற்றாக்குறையே பிரதான காரணம் என்றார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவபடுத்திய எம்மவர்கள் கடமை உணர்வோடு செயற்பட்டிருந்தால், நிதியுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும் எனத் தெரிவித்த அவர், அவர்கள் பொதுநல சிந்தனையற்று சுயநலவாதிகளாக செயற்பட்டதன் காரணமாகவே, மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்றும் நீள்வதாக, அவர் தெரிவித்தார்.
அத்துடன், அவ்வாறான வரலாற்று தவறை இழைக்க தான் தயாரில்லை எனவும் அதற்கு கடந்த நான்கரை வருடங்களில் செய்த சேவைகள் சாட்சி எனவும் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியதுபோல், இம்முறையும் செயற்பட வேண்டியது அவசியம் என, அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago