Editorial / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச
தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள 42வது சுரங்கத்தில் இருந்து வியாழக்கிழமை (05) காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
தெமோதர ரயில் நிலையத்தின் கண்காணிப்பு பிரிவினர், சடலத்தை கண்டதும், ரயில் நிலைய அதிபருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெமோதர தொழிற்சாலைத் பிரிவைச் சேர்ந்த ராமகிருஸ்ணன் கிருஷ்ணகுமார் (வயது 27) என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (04) இரவு அவர் வீட்டில் இல்லை என பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025