கு. புஷ்பராஜ் / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரபத்தனை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான டயகம நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள டயகம கிழக்கு, மேற்குக்குச் செல்லும் வீதியான டயகம சுற்றுபங்களா வீதி, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, எந்தவொரு புனரமைப்பும் இன்றி, குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த வீதியை, நான்கு பிரிவுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதாகவும் இந்த வீதியில் பயணிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், பல சிரமத்துக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீதி மிக மோசமாகக் காணப்படுவதால், நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போதே, அவர்கள் மரணித்த சம்பவம் பல நிகழ்ந்துள்ளது என்றும் தோட்டத் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும்போதும் குளவிக்கொட்டுக்கு உள்ளாகும்போதும், வீதி மோசமாக இருப்பதால், பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் வீதி மோசமடைந்துள்ளமையால், அந்த பஸ்ஸும் பழுதடைந்து விடுவதாகவும் தெரியவருகின்றது.
இது குறித்து, பல அரசியல் தலைவர்களிடம் மனு கொடுத்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் இதைச் செய்துகொடுப்பதற்கு முன்வரவில்லை என்றும் சுமார் நான்கு தேர்தலின்போது, தங்களது பிரதேசத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago