2025 ஜூலை 19, சனிக்கிழமை

செந்தில் முன்னிலையில் கல்வியமைச்சர் உறுதி

Editorial   / 2022 ஜனவரி 28 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன விழா மேடையில் வைத்தே உறுதியளித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-செயலாளரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கைக்கே, கல்வியமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார்.

இறக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன,பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன,  பிரியாந்தினி சொய்ஷா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி செயலாளர் ரூபன் பெருமாள்  ஆகியோர் தலைமையில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்தகாலத்தில் இந்தப் பாடசாலைக்கு 1 1/2ஏக்கர் காணியை செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்திருந்ததுடன், 03 மாடி கட்டடம் ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்த பாடசாலையின் வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பாரிய பங்களிப்பு  நினைவு கூர்ந்தார்,  எதிர்காலத்திலும் பாடசாலையின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் முன்னின்று  செயல்படுமென உறுதியளித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் 2014ஆம் ஆண்டு கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக 3000க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர் நியமன பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தனர்.

கடந்தகாலத்தில் இவர்கள் பகுதிப்பகுதியாக உதவி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். என்றாலும் ஆசிரியர் சேவைக்கான தரத்தை பூர்த்தி செய்துள்ள பல உதவி ஆசிரியர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.  அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதன் ஊடாக, வினைதிறனான சேவை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.   அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்த செந்தில் தொண்டமான், அதற்கான உத்தரவாதத்தை மேடையிலேயே வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

 அதற்குப் பின்னர் உரையாற்றிய கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவுப்படுத்துமாறு  செந்தில் தொண்டமான் தற்போது விடுத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி விரைவாக அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், 5000 ரூபாய் கொடுப்பனவில் உதவி ஆசிரியர்களை உள்ளடக்குவதற்கான வாய்ப்பினை ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X