2025 மே 19, திங்கட்கிழமை

செனன் விபத்தில் 5 பேர் தப்பினர்

Editorial   / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வானொன்று, கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் செனன் பிரதேசத்தில் வைத்து  வீதியிலேயே விபத்துக்கு உள்ளா

கியுள்ளது.

எனினும்,  அதில் பயணித்த ஐவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று (25) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அந்த வானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்க​ளே பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வேகத்தில் பயணித்த போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வாகனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியாமல் போயுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை எனினும், வாகனத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டள்ளது என்றனர்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X