2025 மே 01, வியாழக்கிழமை

சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் காணி அபகரிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

Gavitha   / 2021 மார்ச் 15 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் காணி, இனந்தெரியாதவர்களால் அபகரிக்கப்படுவதாகக் கூறி. கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றிணைந்து, நில அளவையாளரை அழைத்து வந்து, கல்லூியின் காணியை அளக்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (14) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கல்லூரியின் காணி, இனந்தெரியாதவர்களால் அபகரிக்கப்படுவதாகவும் மைதானம் குன்றும் குழியுமாக இருக்கின்றமையால், வீதி அதிகார சபையின் ஊடாக, மண் கொட்டி நிரப்புவதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மைதானத்தின் ஊடாக, வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் இது தொடர்பாக கல்லூரி அதிபரிடம் வினவியபோதும், அது தொடர்பில் தனக்குத் தெரியாது என்று பதிலளித்ததாக, பழைய மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக, கல்லூரி அதிபரிடம் வினவியபோது, சீடா நிறுவனத்தின் ஊடாக, தங்களது பாடசாலைக்கு ஒரு காணி வரைபடம் வழங்கப்பட்டது என்றும் அந்த வரைபடத்தை தான் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலை காணியை எவர் அபகரிக்க முயன்றாலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எனினும் காணி அபகரிப்பு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு, ஒரு முறையான ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .