Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவிக்கள், தற்போது செயலிழந்து காணப்படுவதாக, பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்லும் இடமாக, எல்ல பிரதேசம் காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, இப்பகுதியெங்கும் சுற்றுலா அமைச்சின் 1 மில்லியன் ரூபாய் செலவில், சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டன. இதனைக் கண்காணிக்கும் பொறுப்பு, கிராமசேவகருக்கூடாக, எல்ல பொலிஸாரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், சிசிடிவிக்கள் இயங்குவதற்காகச் செலுத்த வேண்டிய கட்டணம் இதுவரை செலுத்தப்படாமையால், எல்ல பிரதேசமஙெ்கும் பொருத்தப்பட்ட சிசிடிவிக்கள் தற்போது செயலிழந்து காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எல்ல பகுதியில், சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், தமது பொருட்களை பாதுகாப்பதில் பல்வேறு இடர்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
3 hours ago