Editorial / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில், கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவி வருவதால், 2021 ஜனவரி மாதம் நிறைவடையும் வரை, சிவனொளிபாத மலைக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார அறிவுறுத்தியுள்ளார்.
"நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாகப் பரவும் அபாயம் இருக்கின்றது. நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்புடன் ஆலோசனை நடத்தினோம். அதனடிப்படையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றார்.
சிவனொளிபாதமலை மூடப்படவில்லை. ஆனாலும், ஜனவரி மாதம் இறுதிவரை நிலைமைகள் அவதானிக்கப்பட்டு, வழிபாடுகளுக்காக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்" என்றார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago