2026 மே 02, சனிக்கிழமை

ஜனாக்களை தகனம் செய்தமைக்கு வடிவேல் சுரேஷ் கண்டனம்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொவிட்-19ஆல் உயிரிந்த முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்தமைக்கு, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

தற்போதைய சூழ்நிலையிலும் சரி கடந்த காலத்திலும் சரி, எந்தவொரு சமூக மாற்றம் ஏற்பட்டாலும், முஸ்லிம் மக்களே பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் ரமழான் நோன்பு நேரத்தில், உள ரீதியான பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை, அவர்களது மார்க்க விதிமுறைச் சட்டங்களை மீறி தகனம் செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ரீதியில் உலக சுகாதார ஸ்தாபனமே அங்கிகாரம் அளித்துள்ள இவ்விடயத்தை கருத்திற் கொள்ளாது எதிர்மறையாக செயற்படும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மார்க்கத்தின் விதிமுறைச் சட்டங்களை பற்றுடன் பின்பற்றும் முஸ்லிம்களின் மார்க்கத்தை மீறும் வகையில், ஜனாஸாக்களை  தகனம் செய்தமை மனிதாபிமானமற்ற செயலாகவே கருதப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த மதத்தை சார்ந்தவராயினும் தத்தமது சம்பிரதாயங்கள், மரபு வழிமுறைகளை பின்பற்றுவது அவர்களது சுயவிருப்பத்திற்குரியவையாகும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .