Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோர்தானில் எதிர்வரும் 26,27 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் பங்கேற்கவுள்ளார் என்று, அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, அவர் எதிர்வரும் 25ஆம் திகதி, ஜோர்தான் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான மாநாடு, ஜோர்தான் நாட்டின் அமான் நகரில் அமைந்துள்ள ‘கிங் ஹீசெயின் பிங் தலால்’ சர்வதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்களின் நிலைமைத் தொடர்பில் இந்த மாநாட்டில் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்த அரவிந்தகுமார் எம்.பி, மலையகச் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .