2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

டிக்கோயாவிலும் சைட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

அரச வைத்திய அதிகாரிகளினால்  முன்னெடுக்கப்பட்டுள்ள சைட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள்  இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சைட்டத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச வைத்தியசேவை பாதிப்படைவதுடன் இலவசக்கல்வி முறையும் வியாபாரமயமாகுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த வைத்தியசாலையில், நோயாளர் பிரிவு மற்றும் பரிசோதனைப் பிரிவுகள் முற்றாக செயலிழந்து காணப்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் 24 மணித்தியாலயங்கள் இடம்பெறும் என டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .