R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டவருக்கு நீதிகோரி, டயகம மேற்கு மூற்றாம் பிரிவு தோட்ட மக்கள் நேற்று முன்தினமும் (14) ஆம் திகதியும் நேற்றும் (15) புதன்கிழமையும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த 55 வயதுடைய எஸ். ராஜேந்திரன் என்பவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு, டயகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட, இரு நபர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பில் முடிவடைந்தது. இந்த மோதலால் ஒருவர் டயகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேச சென்ற தோட்ட கமிடி தலைவர் எஸ்.ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக, வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இப்பிரச்சனையை இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் நிதிச்செயலாளர் மருதபாண்டி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடன் அறிவித்ததையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இந்தப் பிரச்சினைக்கு நீதிவேண்டுமென தெரிவித்து பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
9 minute ago
11 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
38 minute ago
43 minute ago