Editorial / 2025 மே 26 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 33 வயதான நபர் பலியானார்.
வெதமுல்லையில் இருந்து கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த லொறியை வழியில் நிறுத்தி விட்டு இறங்கிய லொறியின் சாரதி, லொறி டயருக்கு கல் ஒன்றை வைக்க முற்பட்ட போது குறித்த லொறி தானாக நகர்ந்து சாரதி மீது ஏறி சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து லொறி சாரதியை பிரதேச மக்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற சாரதி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago