Kogilavani / 2021 மே 20 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.போதியளவான கட்டில் வசதிகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை, நோட்டன் பிரிட்ஜ், பொகவந்தலாவை, பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொற்றாளர்களாக இனங்காணப்படுவர்கள், டிக்கோயா வைத்தியசாலையிலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட சேவையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதிப் பிரிவில் 15 தொற்றாளர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வேறு நோய் நிலைமைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் அவர்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் மேலும் பல கொரோனா சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்தித் தருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கோரிய போதும் பணிப்பாளர் பாராமுகமாகச் செயற்டுவதாக வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வைத்தியசாலையில் இதுவரை 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூரியவை தொடர்புகொண்டு கேட்டபோது, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தேவை ஏற்படும் பட்சத்தில் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், இதற்கான நடவடிக்கைகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் மேற்கொள்ளவில்லையாயின் அவருடன் தொடர்புகொண்டு, சிகிச்சை பிரிவுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago