Janu / 2025 மே 21 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - வெல்லவாய வீதியில் பலருவ சந்திக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் டிப்பர் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை, கும்புக்கன, சில்பர வீதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் மற்றும் கும்புக்கன, கல்வல வீதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் கும்புக்கனையிலிருந்து மொனராகலை நகரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எம்பிலிப்பிட்டியவில் இருந்து அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் பின்னால் வந்து மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது.
டிப்பர் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இருவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமனசிறி குணதிலக்க

8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago