2026 மே 07, வியாழக்கிழமை

‘டியன்சின் சாஞ்சிமலை பாதைக்கு இ.தொ.கா உரிமைக் கோர முடியாது’

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டியன்சின் - சாஞ்சிமலை வரையிலானக் காபற் பாதைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உரிமைக் கோர முடியாதெனத் தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோர்வூட் பிரதேச செயலாளரும் சுப்பையா கமலதாசன், இந்த பாதையை தொழிலாளர் தேசிய சங்கமே பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவம் தெரிவித்துள்ளார்.

105 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் டியன்சின் தொடக்கம் சாஞ்சிமலை வரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காப்பர்ட் பதையை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, இந்த பாதை​ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய நிர்மாணிக்கப்பட்டாக நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த பாதை எத்தனைக் கிலோமீற்றர் என்பதுக்கூட அவருக்குத் தெரியாது.

இந்த பாதை நிர்மாணிப்புப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அவர் அரசியலுக்குகூட வரவில்லை எனத் தெரிவித்த அவர், தனது வேண்டு கோளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கோரிக்கையில் நிர்மாணிக்கப்பட்டதென்றார்.

கெர்கஸ்வோல்ட் மேற்பிரிவு, வானக்காடு தோட்டங்களுக்கு செல்லவெனவே இந்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்டது. இதுத்தொடர்பான ஆவணங்களும், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த பாதையின் சீரமைப்பு பணிகள் தாமதமானது தொடர்பாக தான் கலந்துரையாடிய ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .