2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

டெங்கு ஒழிப்பு கலந்துரையாடல்

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் தற்போது வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய மாகாண அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினருடனான கலந்துரையாடல் ஒன்று, மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில், ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதிகளில், பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர்களின் உதவியுடன், விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், பிரதி மாதந்தோறும், ஒரு தினத்தை டெங்கு ஒழிப்பு தினமாக அறிவித்து, துப்பரவுப் பணியில் ஈடுபடுதல் முதலான செயற்றிட்டங்களை அமுல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .