Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 20 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காயச்சலால், கேகாலையில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், 1212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கேகாலை பிரதேச தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் சுஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் 11 சுகாதார வைத்திய பிரிவுகளிலும் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படுவதாகவும் இதில் கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
கேகாலை சுகாதார பிரிவில் 234 பேரும் இரண்டாவதாக மாவனெல்ல சுகாதார பிரிவில் 229 பேரும் மூன்றாவதாக தெஹியோவிட்ட சுகாதாரப் பிரிவில் 159 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
டெங்கு மரணங்கள் இரண்டும் தெஹியோவிட்ட மற்றும் கேகாலை ஆகிய சுகாதார பிரிவுகளில் பதிவாகியுள்ளது என்றார்.
கடந்தாண்டு இதே காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்தில் 630 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
எனவே மூன்று நாட்களுக்கு அதிகமாக காயச்சல், உடல் வலி, வாந்தி, கண்ணின் கீழ் பகுதியில் வீங்குதல் போன்றன டெங்கு நோயின் அறிகுறி என தெரிவித்த அவர், இவ்வாறு நோயின் அறிகுறி காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .