2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

டெல்மார் தோட்டத்தில் தீ விபத்து; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வீடு

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் கீழ்ப் பிரிவு தோட்டத்தில், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேற்படி வீடு, நேற்று முன்தினம் (25) மாலை தீ விபத்துக்கு உள்ளானது.

தீ விபத்தினால் மேற்படி வீட்டில் வசித்து வந்த நால்வர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதுடன் விளையாட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மேற்படிச் சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாதிக்கப்பட்டக் குடும்பத்தாருடன் கலந்துரையாடியதுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி  நிதியத்தின்  அதிகாரிகளை தொடர்புகொண்டு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.  

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு, ஆடைகள், ஏனையப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X