Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலவந்தமாக வழங்கப்பட்ட போதையூட்டும் டொபி வகைகளை உட்கொண்ட மாணவர் ஒருவர், உடல்நலக் குறைபாடு காரணமாக, பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி - பேராதனையிலுள்ள பாடசாலையொன்றின் உயர் வகுப்பு மாணவர் ஒருவரால் பலவந்தமாக வழங்கப்பட்ட டொபி வகையொன்றை உற்கொண்ட அதே பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவரே, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவனுக்கு வழங்கியது போலவே, குறித்த பாடசாலையின் 6,7,8 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கும், போதைத்தரும் டொபி வகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.
இவ்விடயம் தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனக்கு உயர் வகுப்பு மாணவர் ஒருவர், டொபியொன்றை வழங்கி அதை உண்ணுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் அதனை உண்ட பின்னர், தான் வாந்தியெடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையாரிடம் தெரிவித்துள்ளான்.
குறித்த சிறுவன் தனக்கு உடல்நிலை வலுவாக இல்லையென தந்தையிடம் கூறி அழுததையடுத்தே, மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையலி் அனுமதிக்கபட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர் உள்ளிட்டோரை முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க பாடசாலைகளுக்கு வெளியிலுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணமெ தெரிவிக்கும் பாடசாலை அதிபர், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago