Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக தயா பண்டார
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகள் அடங்கிய யோசனை, முற்றாகத் தோற்கடிக்கப்படல் வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து தனிநாடாக மாற்றும் யோசனைகள் அடங்கிய ஆவணங்களால், நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று, மஹாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்களாக, தமது கட்சியினர் இந்த யோசனைகளை நிராகரிப்பதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இந்த யோசனைகள் குறித்து, தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
எனினும் கடந்த வாரம் யாழுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்க் கட்சிகயின் இந்த யோசனைகள் தொடர்பில் அனுகூலமான கருத்தை தெரிவித்துள்ளமையால், சஜித் பிரேமதாஸவின் தரப்பினர் மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
என்றாலும், புதிய ஜனநாயக முன்னணியுடன் தொடர்புடைய சகல தரப்பினரும் இந்த யோசனைகள் குறித்து, தமது நிலைப்பாட்டை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
59 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago