Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாகவும் எமது தொழிற்சங்கங்கள் ஒரே சங்கமாகவும் விரைவில் மாறும்” என, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து, கூட்டணி என்பது தனி ஒரு கட்சியாக செயற்பட வேண்டிய அடுத்த கட்டம் உதயமாகி விட்டது என எண்ணுகிறேன். அதேபோல், எமது கூட்டணியின் தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரே தொழிற்சங்கமாக புதிய பொது பெயரில், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியின் தொழிற்சங்கமாக செயற்பட்ட வேண்டிய காலமும் உதயமாகி விட்டது என எண்ணுகிறேன்.
“இது பற்றி, கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் நான் கலந்து பேசியுள்ளேன். இது விடயமாக எம் மத்தியில் புரிந்துணர்வும் கொள்கை ரீதியான பொது உடன்பாடும் ஏற்பட்டுள்ளன.
“அந்தவகையில், அடுத்த உறுதியான முற்போக்கு முடிவுகளை எடுத்து அடுத்த கட்டத்துக்குள் அடி எடுத்து வைக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த நாட்டில் செயற்படும் ஏனைய பல அரசியல் கட்சிகளுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கெனவே பல முன்னுதாரணங்களை காட்டியுள்ளது. இது அதில் இன்னுமொரு மைல் கல்லாக அமையும் என நான் நினைக்கிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago