2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீயினால் குடியிருப்பு கருகியது

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். கணேசன், மு.இராமச்சந்திரன்

ஹட்டன், டிக்கோயா தெற்கு வனராஜா தனியார் தோட்டத்திலுள்ள குடியிருப்பொன்றில், சனிக்கிழழை இரவு ஏற்பட்ட திடீர் தீயினால், குடியிருப்பின் ஐந்து அறைகளும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டள் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி குடியிருப்பில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட 15 பேர், தோட்டக் காரியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கூடாக பஸ்ஸில் பயணித்த பயணிகள், பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்றபோது, குடியிருப்பின் கூரையில் புகை வருவதைக் கண்டு கூச்சலிட்டுள்ளதுடன், குடியிருப்புக்குள் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பின்னர், அயலவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, இரண்டு மணித்தியாலயங்களுக்குப் பின்னரே தீயைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், வீட்டிலிருந்த ஆவணங்கள், 2 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள்,ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம், தளபாடங்கள் மற்றும் ஏனைய பாவனை பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார ஒழுக்கே, இத்தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .