Kogilavani / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பட்டதாரி ஆசிரியரான தேரரின்; தாக்குதலுக்கு உள்ளான க.பொ.த.உயர்தர மாணவி (வயது 18) ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய தேரரரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று(27) கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அலவத்துகொடைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி தேரருக்கு(வயது-29) குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென தேரர் மாணவிக்கு, பலமுறை எடுத்துக் கூறியபோதிலும் அம்மாணவி தொடர்ந்து அச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தேரர் மாணவியையும் அவரது தாயையும் விஹாரைக்கு அழைத்து அறிவுரைகள் கூறியபோது ஏற்பட்ட வாய்த்தர்கத்தின்போது மாணவியை தேரர் தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறினார்.
இதன்போது தேரரின் சகோதரியும் அருகில் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
5 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 hours ago
5 hours ago