Sudharshini / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண கைத்தொழில், இளைஞர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஒழுங்கு செய்துள்ள தொழில் வாய்ப்புச் சந்தை எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி கண்டியில் இடம்பெற உள்ளது.
கண்டி, தெய்யான்வல எல்.எட்மண் சில்வா மைதானத்தில் காலை 9 மணி முதல் பி.ப 4.00 மணிவரை இது நடைபெற உள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இத்தொழில்வாய்ப்புச் சந்தையில் உள்ளுர், வெளியூர் மற்றும் அரச, தனியார் துறை நிறுவனங்கள் நேர்முகப் பரீட்சைகளை நடத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம் இதே இடத்தில் மகளிர் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகக் கண்காட்சி, விற்பனைக் கூடங்கள் என்பன ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளன. இது மு.ப.9.00 முதல் இரவு 8.00 மணிவரை இடம் பெறும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago