2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீ விபத்தில் பாதித்தோருக்கு புதிய வீடுகள்?

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா, தெற்கு வனராஜா தனியார் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று குடும்பங்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

“வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு, தோட்ட நிர்வாகம் உரிய நிலத்தை வழங்கினால், அந்தக் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

தெற்கு வனராஜா தோட்டத்தில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தினால், குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியதுடன் இக்குடியிருப்பில் வசித்து வந்த 7 மாத குழந்தை உட்பட 15 பேர் தோட்ட அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை, நேற்றுச்சென்று சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, தோட்ட உரிமையாளருடன் தொடர்புகொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .