Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நானுஓயா கார்லிபெக் தோட்டத் தொழிலாளர்கள், மிக நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த மின்சாரத் தூண் பிரச்சினைக்கு, தகவல் அறியும் சட்டத்தினூடாக, பிரிடோ நிறுவனம் தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மேற்படித் தோட்டத்தில், மரத்திலான மின்கம்பங்களே பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவை உக்கி பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையிலேயே காணப்பட்டன.
இது தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு பலமுறை தெரியப்படுத்திய போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில், மேற்படித் தோட்டத்தில் இயங்கும்
சமூக அபிவிருத்திக் குழு, தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி, நுவரெலியா மின்சாரச் சபைக்கு, மின்கம்பங்கள் பழுது பார்க்கப்படாமைக்கு அல்லது மாற்றீடுச் செய்யப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அறியத்தருமாறு, பெப்ரவரி 14 ஆம் திகதி விண்ணப்பித்திருந்தது.
மின்சாரா சபையிடமிருந்து பதில் வராவிட்டாலு, சரியாக 7 நாள்களுக்குப் பின்னர், அதாவது பெப்ரவரி 23ஆம் திகதி, மின்சார சபையினர், கார்லிபேக் மேற் பிரிவில் மிக மோசமாகப் பழுதடைந்திருந்த நான்கு மின்சாரக் கம்பங்களை அகற்றி, கொங்ரீட் கம்பங்களை நாட்டி மின்சார இணைப்பையும் எற்படுத்தினர்.
அவர்களிடம் போதியளவு கொங்ரீட் கம்பங்கள் கைவசம் இல்லாதபடியால் அவை கிடைத்தவூடன் மற்றைய மின்சாரக் கம்பங்களையும் மாற்றித் தருவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர் என்று, தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
பிரிடோ நிறுவனத்தினூடாக, சமூக அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாக, இவ்விடயத்தில் தமக்கு சேவை வழங்குநர் யார் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாலும் விசேடமாக, தகவல் அறியூம் சட்டத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதை மக்கள் அறிந்து அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பதால்தான் தமது தோட்டப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைத்ததாக, கார்லிபெக் சமூக அபிவிருத்தி குழுவின் தலைவர் எஸ்.தேவதாசன் தெரிவித்தார்.
எனவே, பெருந்தோட்ட மக்கள் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தினால், அரசு சேவைகள் தொடார்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
12 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
47 minute ago