2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தகவல் பரிமாற்றத்துக்காக ஆறு தொலைபேசிகள் கையளிக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஜனவரி 06 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற திடீர் அனர்த்தங்களின் போது, தகவல்களைப் பரிமாற்றுவதற்காக , சேவ் த சில்ரன் நிறுவனத்தால், 6 தொலைபேசிகள், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபோத்தாகமவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அந்த அமைப்பின் இரத்தினபுரி மாவட்ட முகாமையாளர் நளிந்த கருணாரத்னவால் இந்த தொலைபேசிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற தொலைபேசிகளில் இரண்டு, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும் இரத்தனபுரி பொலிஸ் நிலையத்துக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X