Editorial / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
வீதியில் கிடந்த பெறுமதி மிக்க தங்க சங்கிலியை ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை நிருபித்துள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
பதுளை சென்று திரும்பிய சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் புவனேஸ்வரன் தம்பதியர் தமக்கு உரித்தான இரண்டு பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கி சென்ற வேளையில் தவற விட்டு உள்ளனர்.
அதனைத் கண்டு எடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன், தம்பிராஜ் சின்ன தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் உரியவரிடம் கையளித்தனர்
இவர்களது நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர். தவிர விட்ட தம்பதியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025