R.Maheshwary / 2022 ஜனவரி 30 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
நோர்வூட் பிரதேச சபைக்கு தமது அலுவல்களை நிறைவேற்றிக் கொள்ள வரும் போது, கட்டாயம் கொவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொண்டமைக்கான அட்டைகளை தம்மோடு கொண்டு வர வேண்டும் என நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பெயர்ப்பலகையும் பிரதேச சபை வளாகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
பிரதேச சபைத் தவிசாளர் என்ற ரீதியிலும், சுகாதாரக் குழுவுக்கு தலைவர் என்ற அடிப்படையிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளதால் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
எமது சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள 17 கிராம சேவகர் சுமார் 34 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 5 ஆயிரம் பேர் உள்ளார்கள். அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 90 சதவீதமானவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. இருந்தும் சுமார் 10 வீதமானவர்கள் எந்த விதமான தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளாமல் இருகின்றார்கள்.
எனவே, அரசாங்கம் அறிவித்துள்ளது போல, ஒவ்வொருவரும் தமது சுய பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டு சமூக பாதுகாப்புக்கும் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான அத்தாட்சியாக தடுப்பூசி அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது உல்லாசப் பயணிகளின் தொகையும் அதிகரித்து வருகின்றது. சிவனொளிபாதமலை வருகின்ற யாத்திரிகர் தொகையும் கூடியுள்ளது. மூன்றாவது அலை பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், பிரதேச சபையின் ஊடாக சுகாதார நடைமுறைகளைப் பேணுவதற்கான அறிவுறுத்தல்கள் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (18) முதல் அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது. பிரதேச சபையில் அலுவல்களை நிறைவேற்றிக் கொள்ள வருகை தருவோர் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago