R.Maheshwary / 2021 ஜூன் 02 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனா தடுப்பூசியை 5,000 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுவதாக தனது பேஸ்புக்கில் பதவிட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளர் ஒருவர் நேற்றுமுன்தினம் 91) கைது செய்யப்பட்டுள்ளார்.
கலவான -தபஸ்ஸரகந்த வித்தியாலயத்தில் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, மேற்படி சந்தேகநபர் அதனைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், தடுப்பூசிகள் 5,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் கலவான பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
30 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
9 hours ago