2026 ஜனவரி 21, புதன்கிழமை

’தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுக்கவும்’

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

மலையகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலைலயில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொழிலாளர் தேசிய சங்க நிர்வாக பொறுப்பதிகாரி அழகமுத்த நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களித்து வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசாங்கமானது நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு ஊசிகளை பெற்றுவருகின்றது அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள தடுப்பூசிகளை பெருந்தோட்ட மக்களுக்கும் விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X